கேரளாவில் ஜூன் 1 முதல் பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்த்தப்படுவதாக மில்மா நிறுவனம் அறிவித்துள்ளது. கால்நடை தீவனம், மின்சாரம் மற்றும்
போக்குவரத்து செலவுகள் அதிகரித்துள்ளதால், விவசாயிகளைப் பாதுகாக்கவும் பால் உற்பத்தியை நிலைநிறுத்தவும் இந்த விலை உயர்வு அவசியமாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு உற்பத்தியாளர்களான ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.