தாராபுரம் இடைத்தேர்தலில்
திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து
மு.க.ஸ்டாலின் இன்று (அக்.2) பரப்புரை மேற்கொண்டார். அப்போது தவெக அரசை கடுமையாக விமர்சித்தார். மேலும், “தவெக ஆட்சி தொடர்ந்தால் தமிழகத்தில் பால் விலை, பேருந்து கட்டணம் விலை கடுமையாக உயரும்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “ஒரு ஓட்டு தானே என நினைக்காமல் அனைவரும் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும். உங்கள் குழந்தைகள் நாளை நல்ல நிலைக்கு வர திமுகவுக்கு வாக்களியுங்கள்” என்றார்.