தமிழகத்தில் மினி பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும்

2411பார்த்தது
தனியார் பேருந்துகளுக்கும் மகளிர் இலவசப் பயணத் திட்டத்தை விரிவுபடுத்தி அரசு மானியம் வழங்கக் கோரி, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனம் நாளை (செப்.30) ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் மினி பேருந்துகள் நாளை வழக்கம்போல் இயங்கும் எனத் தமிழ்நாடு மினி பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் கொடியரசன் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தினசரி பயணிகளுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

நன்றி: PT

தொடர்புடைய செய்தி