சாரண சாரணியர் இயக்கத்தின் உயரிய விருதான 'வெள்ளி யானை' விருதினை தமிழக அமைச்சர் அன்பில் மகேஸ் பெறவுள்ளார். தமிழ்நாடு சாரண சாரணியர் இயக்கத்தின் தலைவராக சிறப்பாக செயல்பட்டு, இயக்கத்தை வழிநடத்தியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் நாளை (நவ.26) நடைபெறும் 19-வது தேசிய ஜாம்போரி விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இவ்விருதை அவருக்கு வழங்கவுள்ளார்.