மகளிர் உரிமைத் தொகையை யாரேனும் நிறுத்த முற்பட்டால் தமிழ்நாடே கொந்தளிக்கும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று (பிப்., 20) பேசிய அவர், 'மகளிர் உரிமைத் தொகை திட்டம் உட்பட நல்ல திட்டங்களை செயல்படுத்தினால் போதும் மற்ற மாநிலங்களைவிட நாம் முன்னிலையில் இருக்கலாம். திட்டத்தை யாரேனும் நிறுத்த முற்பட்டால் தமிழ்நாடே கொந்தளிக்கும். அந்த கொந்தளிப்பு இருக்கும் வரை தமிழ்நாட்டை ஆட்சி செயவது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்தான்' என்று தெரிவித்தார்.