தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் ஆய்வு செய்த அமைச்சர்

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப.வெங்கடரமணன் சென்னை கிண்டி, தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்திற்கு நேற்று (மே 21) நேரில் சென்று நிறுவன செயல்பாடுகள் மற்றும் நிர்வாக செயல்திறன்களை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, விவசாயிகள் மற்றும் அரசு நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் உணவு தானியங்கள் எவ்வாறு பாதுகாப்பாக சேமித்து வைக்கப்படுகிறது என்பது குறித்து கேட்டறிந்தார். காலமுறை பராமரிப்பு பணிகளை துரிதப்படுத்தவும், கிடங்குகளில் முழு கொள்ளளவை எட்டிடவும் அறிவுரைகளை வழங்கினார்.
