2027 கல்வியாண்டில் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், சீருடைகள், புத்தகப்பைகள் உள்ளிட்ட விலையில்லா நலத்திட்ட பொருட்களை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு நேரடியாக விநியோகம் செய்யும் பணியினை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் நேற்று (மே 23) நேரில் சென்று ஆய்வு செய்தார். வரும் ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், தேவையான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் செய்து வருகின்றனர்.