பட்டாசு உற்பத்தியாளர்கள் கூட்டத்தில் அமைச்சர் கீர்த்தனா

38பார்த்தது
பட்டாசு உற்பத்தியாளர்கள் கூட்டத்தில் அமைச்சர் கீர்த்தனா
தவெக சார்பில் சிவகாசியில் வென்று அமைச்சரான கீர்த்தனா, பட்டாசு ஆலை உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேச மறுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரசாரத்தின் போது பட்டாசு தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாக உறுதியளித்திருந்த அவர், டான்பாமா அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் உற்பத்தியாளர்கள் கருத்துக்களைக் கூறிய பின் எதுவும் பேசாமல் முடித்தார். பேச வற்புறுத்தியபோது, "சில காரணங்களால், காலம் கருதி பின்பு பேசுவோம்" எனக் கூறிவிட்டுச் சென்றார்.