அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் அனுமதி

30பார்த்தது
அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் அனுமதி
உடல்நலக்குறைவு காரணமாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2 நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.
அவருக்கு தொடர் காய்ச்சல் நீடித்து வந்ததால், சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல் நலம் தேறியவுடன் ஓரிரு நாட்களில் அமைச்சர் வீடு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி