பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அலங்காநல்லூரில் இன்று (ஜன.17) ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுகிறது. இதனை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த போட்டியை நேரில் காண முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகை தரவுள்ளார். இதில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து 6,500 காளைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. அதில் சிறந்த 1,100 காளைகளுக்கு போட்டியில் பங்கேற்க டோக்கன் வழங்கப்பட் டுள்ளது. 600 மாடுபிடி வீரர்கள் களம் இறங்குகின்றனர்.