FL-2 விடுதிகளில் 21 வயதுக்குட்பட்டோரை அனுமதிக்கக்கூடாது - அமைச்சர் உத்தரவு

36பார்த்தது
FL-2 பார்கள், மனமகிழ்மன்றங்களில் 21 வயதுக்குட்பட்டோரை அனுமதிக்கக்கூடாது என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் உத்தரவிட்டுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், FL-2 பார்களுக்கு தவெக ஆட்சியில் அனுமதி வழங்கப்படவில்லை. கடந்த திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட பார்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. 21 வயதுக்குட்பட்டோரை அனுமதிக்கக்கூடாது. இதில் அந்தந்த நிர்வாகங்கள் கண்டிப்புடன் செயல்பட வேண்டும். மீறினால் லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என்றார். நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி