திரைத்துறை கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் விஜய்யுடன் அமைச்சர் ராஜ்மோகன் ஆலோசனை

5338பார்த்தது
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் விஜய் அவர்களுடன் செய்தி மற்றும் சினிமா தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று (மே 18) ஆலோசனை மேற்கொண்டார். அண்மையில் கமல்ஹாசன் உள்ளிட்ட திரைத்துறையினர் முன்வைத்த கேளிக்கை வரி ரத்து, கூடுதல் காட்சிகள் மற்றும் திருட்டு விசிடி தடுப்பு போன்ற 6 முக்கிய கோரிக்கைகள் குறித்து இந்த சந்திப்பில் விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், தமிழ் சினிமாத்துறையை மேம்படுத்த அடுத்தகட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார். நன்றி:பாலிமர்

தொடர்புடைய செய்தி