எடப்பாடியில் மினி ஸ்டேடியம் - இபிஎஸ் கோரிக்கைக்கு அமைச்சர் பதில்

2616பார்த்தது
எடப்பாடியில் மினி ஸ்டேடியம் - இபிஎஸ் கோரிக்கைக்கு அமைச்சர் பதில்
எடப்பாடி தொகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் மினி ஸ்டேடியம் அமைப்பதற்காக கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்தார். சட்டமன்றத்தில் இன்று பேசிய இபிஎஸ், ஸ்டேடியம் அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும், கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பதிலளித்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ஸ்டேடியம் அமைக்கும் பணிகளில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் பணிகளை நிறுத்தியுள்ளோம். விரைவில் பணிகள் தொடங்கும் என்றார்.

தொடர்புடைய செய்தி