அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி

701பார்த்தது
அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி
உடல்நலக்குறைவு காரணமாகத் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கோவை அவிநாசி சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில் அவரது உடல்நிலை சீராகவும், மருத்துவர்களின் கண்காணிப்பிலும் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் மருத்துவமனை நிர்வாகம் அவரது உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.