பள்ளி மாணவர்களுக்கு விசிலுடன் கூடிய குடைகள் வழங்கிய அமைச்சர் தென்னரசு

116பார்த்தது
பள்ளி மாணவர்களுக்கு விசிலுடன் கூடிய குடைகள் வழங்கிய அமைச்சர் தென்னரசு
காஞ்சிபுரம் அடுத்த நசரத்பேட்டை அரசு பள்ளியில் ஹூண்டாய் மொபிஸ் நிறுவனம் சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்ட புதிய கட்டடங்களை அமைச்சர் தென்னரசு திறந்து வைத்தார். தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு விசிலுடன் கூடிய குடைகளை அன்பளிப்பாக வழங்கினார். மழைக்காலத்தில் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வழங்கப்பட்ட இந்த குடைகளை மாணவர்கள் ஆர்வத்துடன் பெற்றுக்கொண்டனர். விசிலுடன் கூடிய குடைகள் மாணவர்களின் கவனத்தை ஈர்த்தன.

தொடர்புடைய செய்தி