“டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட கூடுதலாக பணம் வசூலிக்கும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என மதுவிலக்குத்துறை அமைச்சர் விக்னேஷ் எச்சரித்துள்ளார். மேலும், “கூடுதல் பணம் வாங்குவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள்” என்றார். மேலும், “ஒருபோதும் இந்த அரசு எந்தவித மிரட்டலுக்கும் பயப்படாது; யாருக்கும் அடிபணியாது” என்றார்.