தமிழகத்தின் புதிய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக கிணத்துக்கடவு எம்எல்ஏ விக்னேஷ் பதவியேற்றுள்ளார். முந்தையை
திமுக ஆட்சியில் செந்தில்பாலாஜி மற்றும் முத்துசாமி ஆகியோர் கவனித்து வந்த இந்த துறை தற்போது, முதலமைச்சர்
விஜய் தலைமையிலான அரசில் இளைஞர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மிகுந்த சவால்கள் உள்ள இந்த துறையில் பல சர்ச்சைகளும் நிலவி வருகின்றன. மதுபாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் வசூல் உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளதால் துறையை அவர் எப்படி சமாளிக்க போகிறார் என பொறுத்திருந்து பார்க்கலாம்.