அதிமுகவினருக்கு அமைச்சர் பதவி கொடுப்பதாக இதுவரை தாங்கள் கூறவில்லை எனச் செய்தியாளர்களின் கேள்விக்குத் நிதி அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாகப் பதிலளித்துள்ளார். தவெக அரசுக்கு ஆதரவாக அதிமுக எம்.எல்.ஏ-க்கள் சிலர் வாக்களித்ததைத் தொடர்ந்து எழுந்த அரசியல் விவாதங்கள் மற்றும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அவரது இந்த தற்போதைய விளக்கம் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.