தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவையில் அமைச்சர்களுக்கான இலாகாக்கள் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து, சென்னை தலைமை செயலகத்திற்கு வருகை தந்த புதிய அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளின் கோப்புகளில் கையெழுத்திட்டு முறைப்படி பொறுப்பேற்று கொண்டனர். முதலமைச்சர் விஜய் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வின் மூலம், புதிய அரசின் நிர்வாக பணிகள் தலைமை செயலகத்தில் விறுவிறுப்பாக தொடங்கியுள்ளன.