டெல்லியில் மத்திய அமைச்சர்களின் அலுவலகங்களாக செயல்பட்டு வந்த வரலாற்று சிறப்புமிக்க நார்த் மற்றும் சவுத் பிளாக் கட்டிடங்கள், உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகமாக மாற்றப்பட உள்ளன. 'மத்திய விஸ்டா' திட்டத்தின் கீழ் அமைச்சகங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதால், இந்த பழமையான கட்டிடங்களை பாரம்பரியத்தை பறைசாற்றும் அருங்காட்சியகங்களாக மாற்ற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சுமார் 1.17 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் இந்த அருங்காட்சியகம் அமையவுள்ளது.