கோவை சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இயக்குநர் பா.ரஞ்சித் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கி இருக்கிறது. சம்பந்தப்பட்ட குடும்பத்தை எந்த வகையிலும் ஆற்றுப்படுத்த முடியாத துயரம் இது. குழந்தைகள், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நடவடிக்கைளை தவெக அரசு துரிதமாக எடுக்க வேண்டும். புதிய அரசு என்பதை ஒரு காரணமாக முன்வைக்கக் கூடாது” என்றார்.