தெலங்கானா மாநிலம் குடிஹத்னூரில் இளைஞர் ஒருவர், அப்பகுதியைச் சேர்ந்த சிறுமியை தனது வீட்டிற்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், இளைஞரை வீட்டோடு தீ வைத்து கொளுத்தினர். இதனைத் தடுக்க வந்த காவலர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இளைஞர் மற்றும் சிறுமியின் உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.