சீனாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டதாக கருதப்பட்டு சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்ட மூதாட்டி ஒருவர், மறுநாள் திடீரென உயிருடன் முனகும் சத்தம் கேட்டு எழுந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. "தோற்ற மரணம்" என்ற மருத்துவ நிலையால் இதயம் மற்றும் சுவாச துடிப்பு பலவீனமடைந்திருந்த நிலையில், உறவினர்களே அவர் இறந்துவிட்டதாக முடிவுசெய்து சவப்பெட்டிக்குள் வைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும், அந்த மூதாட்டி, கண்விழித்த அடுத்த 2 நாட்களிலேயே உடல்நிலை மோசமாகி மீண்டும் பரிதாபமாக உயிரிழந்தார்.