அமெரிக்கா-ஈரான் போரால் நிலவும் பதற்றத்திற்கு இடையே, அமெரிக்காவின் கடல் முற்றுகை எச்சரிக்கையை மீறி சென்ற 'எம்.வி. வேலா நோவா' என்ற பனாமா நாட்டு கப்பலை குறிவைத்து அமெரிக்க ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. ஓமன் வளைகுடாவில் நடைபெற்ற இத்தாக்குதலில் கப்பலின் என்ஜின் செயலிழந்த நிலையில், இதுவரை 55 வர்த்தக கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, உத்தரவுக்கு பணியாத 3 கப்பல்கள் செயலிழக்க செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.