717 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான உத்தரவில் குளறுபடி

11408பார்த்தது
717 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான உத்தரவில் குளறுபடி
தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான உத்தரவை செயல்படுத்துவதில் தொடர்ந்து குளறுபடி நிலவுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவசரகதியில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டதால் பெரிய அளவில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக பணியாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. எந்தவித ஆய்வும் செய்யாமல் கடைகளின் பட்டியலை அதிகாரிகள் அளித்ததால் உத்தரவை செயல்படுத்துவதில் தாமதம் நிலவுவதாக தெரிகிறது. பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டு தலங்களுக்கு அருகில் உள்ள கடைகளை மூட அரசு உத்தரவிட்டிருந்தது.

தொடர்புடைய செய்தி