எழுத்தாளர் ரா.முருகன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

22பார்த்தது
எழுத்தாளர் ரா.முருகன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்
எழுத்தாளர் ரா.முருகன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நவீனத் தமிழ் இலக்கியத்தின் படைப்பாளிகளுள் ஒருவரான ரா.முருகன் மறைவெய்திய செய்தியறிந்து வருத்தமுற்றேன். கவிதை, கட்டுரை, திரைக்கதை எனப் பல்வேறு தளங்களில் தனது படைப்பாற்றலால் தமிழுக்கு செழுமை சேர்த்தவர். அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்குப் பேரிழப்பு. அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், சக எழுத்தாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி