முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையில் முழு பவர் இல்லாததால்தான் இன்று இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது, இருந்திருந்தால் முட்டுக்கட்டை போட்டிருப்பார்கள் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். நெல்லை கேடிசி நகரில் இன்று (ஏப்., 08) பரப்புரை மேற்கொண்ட அவர், நம்மைப் பற்றி அவதூறு பரப்புகிறார்கள். வெளியில் தனித்தனியாக இருந்தாலும், திமுக, பாஜக கூட்டணிகள் ஒன்றுதான். திமுகவுடன் இருப்பது கல்லாப்பெட்டி கூட்டணி. திமுக அரசால் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.