1984-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முதன்முதலாக சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டார்
ஸ்டாலின். ஆனால், வெற்றி பெறவில்லை. அந்தத் தேர்தலில்,
திமுக மொத்தமே 24 இடங்களில்தான் வெற்றி பெற்று இருந்தது. அப்போது உடல் நலம் குன்றியிருந்த எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக வீசிய அனுதாப அலை, இந்தத் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்ததாக
திமுக தலைவர்கள் கருதினர்.