சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய், தற்போது திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கொளத்தூரில் தோல்வியடைந்த முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், அனுதாப அலையைப் பயன்படுத்தி இங்கு போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அதேநேரம் தவெக சார்பில் கு.ப.கிருஷ்ணன் மீண்டும் களம் இறக்கப்படலாம் எனத் தெரிவதால் திருச்சியில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.