மதுராந்தகத்தில் முதல்வர்
விஜய் பிரசாரம் மேற்கொண்ட இடத்தில், வி.ஐ.பி நுழைவாயிலில் எம்.எல்.ஏ-க்களுக்கு போலீஸார் அனுமதி மறுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. "நான் இந்த மாவட்டத்து எம்.எல்.ஏ; முதல்வரை வரவேற்க வேண்டும்" எனக் கூறிய திருப்போரூர் எம்.எல்.ஏ விஜயராஜிடம், பட்டியலில் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என போலீஸார் தெரிவித்தனர். பின்னர்
டி.எஸ்.பி நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகே எம்.எல்.ஏ மட்டும் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டார்.