தென் தமிழகத்தில் வனவிலங்குகளுக்கு ஏற்படும் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து நோய்ப்பரவலை தடுப்பதற்காக, ரூ.1 கோடி செலவில் ‘நடமாடும் வனவிலங்கு தடயவியல் மற்றும் நோய்கண்டறியும் ஆய்வகம்’ தயார் நிலையில் வைக்கப்படும் என்று வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் அறிவித்தார். சட்டப்பேரவையில் இன்று (செப்.7) பேசிய அவர், காடுகளிலுள்ள விலங்குகளை பாதுகாப்பதுடன், வனவிலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய ஜூனோடிக் வகை தொற்றுநோய்களை தடுப்பதையும் இத்திட்டம் முதன்மை நோக்கமாக கொண்டுள்ளது என தெரிவித்தார்.