குஜராத் முதல் கேரளா வரை நிலவும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக, தமிழகத்தில் ஜூலை 14-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் (IMD) தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், குறிப்பாக நீலகிரியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூரில் நேற்று (ஜூலை 8) அதிகபட்சமாக 90 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.