தமிழக பள்ளிகளில் படிக்கும் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹெல்மெட், தண்ணீர் பாட்டில் வசதி உடன் கூடிய நவீன சைக்கிள் வழங்கப்படும் என நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்துள்ளார். பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், GENZ மாணவர்களின் வளர்ச்சியை முன்னிறுத்திய இந்த திட்டத்திற்காக ரூ.277 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 9-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி, உணவு, சீருடைகள், தங்குமிடம், பாடப்புத்தகங்கள் விலையில்லாமல் வழங்கப்படும் என அறிவித்தார்.