பாகிஸ்தான், வங்காளதேச எல்லைகளில் நீண்ட காலமாக நீடித்து வரும் ஊடுருவல் பிரச்சினையை முற்றிலும் ஒழிப்பதற்கான சிறப்பு திட்டம் ஒன்றை மத்திய அரசு அமல்படுத்த உள்ளதாக உள்துறை அமைச்சர்
அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்தியாவின் மக்கள் தொகை அமைப்பை செயற்கையாக மாற்றுவதற்கு நடக்கும் சதிச்செயல்களை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தடுத்து முறியடிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.