பிரதமர் மோடி குறித்து முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இன்று (நவ.12) பேசிய அவர், “சிவகாசியில் புதிய ரயில்வே மேம்பாலங்களுக்கு அனுமதி பெற்றது அதிமுக ஆட்சியில் தான். மத்திய அரசிடம் திமுகவால் அனுமதி வாங்க முடியுமா?. மத்திய அரசில் இருப்பது உங்க ஐயா இல்லை, எங்கள் ஐயா மோடி தான் இருக்கிறார். எங்கள் டாடி தான் இருக்கிறார்” என புகழ்ந்து பேசினார். இது அரசியல் வட்டாரங்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.