தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு மாநாட்டை கோவையில் இன்று (நவ.19) பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றி வருகிறார். அப்போது பிரதமரின் கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் 21-வது தவணை நிதியை பிரதமர் நரேந்திர மோடி இன்று விடுவித்தார். இத்திட்டம் மூலம், நாடு முழுவதும் உள்ள 9 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ.18,000 கோடி செலுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.