தவெக தலைவர் விஜய்யை, இயக்குநர் மோகன் ஜி மறைமுகமாக தாக்கிப் பேசியதாக கூறப்படுகிறது. முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட 'தேசிய தலைவர்' பட விழாவில் இயக்குநர் மோகன் ஜி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “இந்த மாதிரியான படங்களை Cringe, பூமர் என்று ஒதுக்காமல் பார்த்தால் தான், இன்றைய இளைஞர்கள் அரசியல்படுத்தப்படுவார்கள். இல்லையெனில், ஒரு நடிகரின் பின்னால் நிற்கும் இளைஞர்களைப் போல் அரசியல்படுத்தப்படாமல் போய்விடுவார்கள்” என்றார்.