ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகியுள்ள 'திரிஷ்யம் 3' திரைப்படம், மர்ம நபர்களால் மீண்டும் சிக்கலுக்குள்ளாகும் மோகன்லாலின் குடும்பத்தையும், அவர்களை காப்பாற்ற அவர் நடத்தும் அடுத்தகட்ட போராட்டத்தையும் விறுவிறுப்பாக கூறுகிறது. மோகன்லால், மீனா மற்றும் படக்குழுவினரின் எதார்த்தமான நடிப்பு படத்திற்கு பலமாக இருந்தாலும், முதல் பாதியில் திரைக்கதையின் சுவாரசியம் சற்று குறைந்து சில காட்சிகள் யூகிக்க கூடியதாக அமைந்துள்ளன. இருப்பினும், ஒருமுறை பார்க்கக்கூடிய படமாக அமைந்துள்ளது.