தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக வரும் நவ.15 முதல் 20-தேதி அதிக மழை பெய்யும் என வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். அதற்கு முன்பாக வரும் நவ.11,12-ம் தேதிகளில் சென்னை உட்பட அனைத்து கடலோர மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், நவ.21-ம் தேதி தெற்கு மத்திய வங்கக்கடலில் ஒரு தாழ்வுப்பகுதி உருவாகி படிப்படியாக வலுவடையும் என்றும் அவர் கூறியுள்ளார்.