பிறை நிலவுக்கு மிக அருகே வெள்ளி கிரகம் பிரகாசமான நட்சத்திரம் போல் மின்னும் அரிய வானியல் நிகழ்வு வானில் அரங்கேறியுள்ளது. நிலவும் வெள்ளியும் மிக நெருக்கமாகக் காட்சியளிக்கும் இந்த நிகழ்வு 'சந்திரன் - வெள்ளி சேர்க்கை' (Moon-Venus Conjunction) என அழைக்கப்படுகிறது. மேகமூட்டமில்லாத தெளிவான வானத்தில் இந்தக் கண்கொள்ளாக் காட்சி மிகத் தெளிவாகத் தெரிந்ததால், பொதுமக்கள் மற்றும் ஆர்வலர்கள் அனைவரும் வானில் தோன்றிய இந்த அழகிய நிகழ்வை மிகுந்த வியப்புடன் பார்த்து ரசித்தனர்.