2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அரசியல் சூடுபிடித்துள்ளது. இதற்கிடையில் விழுப்புரம் மாவட்ட மயிலம் தொகுதியைச் சேர்ந்த திமுகவினர் 100-க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். திமுக நிர்வாகி பழனி தலைமையில் இணைந்த இவர்களை சி.வி.சண்முகம் வரவேற்றார். அவர் 2026 தேத்தலில் மயிலம் தொகுதியில் கமிறங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.