விருதுநகர் மாவட்ட திமுக மற்றும் மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைந்து கொண்டனர். திமுக ஐடி விங் அமைப்பாளர் உள்ளிட்ட பலர் நேற்று (நவ., 18) ஒரே நாளில் விலகி, அதிமுகவில் இணைந்துள்ளதால் திமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். தேர்தல் நெருங்கும் சமயத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் நூற்றுக்கணக்கானோர் கட்சி மாறி வருவதால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.