300க்கும் மேற்பட்ட சட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைந்தனர். சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் நேற்று (பிப்., 17) நடைபெற்ற நிகழ்ச்சியில், புதியதாக கட்சியில் இணைந்த இளைஞர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதே போல், ஐஜேகே கட்சியில் இருந்து விலகிய டாக்டர் லீமா ரோஸ் மார்ட்டின் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். லீமா ரோஸ், தவெக பிரமுகர் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் என்பது குறிப்பிடத்தக்கது.