பொருநை அருங்காட்சியகத்தை 3000க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டனர்

2819பார்த்தது
பொருநை அருங்காட்சியகத்தை 3000க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டனர்
நெல்லை ரெட்டியார்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தில் சிவகளை, ஆதிச்சநல்லூர், கொற்கை அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட அரிய தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், கடந்த 2 நாட்களில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அருங்காட்சியகத்தை பார்வையிட்டுள்ளனர். பெரியவர்களுக்கு ரூ. 20, சிறுவர்களுக்கு ரூ. 10, மாணவர்களுக்கு ரூ. 5 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி