2025ஆம் ஆண்டில் இந்தியர்கள் 4,000 கோடிக்கும் அதிகமான ஸ்பேம் அழைப்புகளைப் பெற்றுள்ளது ட்ரூகாலர் நிறுவனம் வெளியிட்ட தகவலின் படி தெரியவந்துள்ளது. இந்த அறிக்கையில் 4,168 கோடி ஸ்பேம் அழைப்புகள், 11.89 பில்லியன் நிராகரிக்கப்பட்ட ஸ்பேம் அழைப்புகள், 12,903 கோடி ஸ்பேம் குறுஞ்செய்திகள் அடங்கும். மோசடி செய்பவர்கள் வங்கிகள், அரசு அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து போலி அழைப்புகளை செய்கின்றனர். OTP அல்லது தனிப்பட்ட விவரங்களைப் பகிர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.