முதல் நாளில் 600க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல்

4118பார்த்தது
முதல் நாளில் 600க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (மார்ச் 30) தொடங்கியது. காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்ற இதில், 234 தொகுதிகளில் இதுவரை 600க்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி, தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதிகளில் மனு தாக்கல் செய்தனர். ஏப்ரல் 6ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம். ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.

தொடர்புடைய செய்தி