பாகிஸ்தானில் மசூதியில் இன்று (பிப்.6) நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 65 பேர் உயிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள கதீஜா துல் குப்ரா மசூதியில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. முன்னதாக, 31 உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 65ஆக உயர்ந்துள்ளது. மேலும், 170-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.