ராஜா கருப்பசாமி இயக்கத்தில், ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா நடிப்பில் வெளியான ‘மொத ராத்திரி’ திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. புதிதாக திருமணமான ஜோடியின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை பார்த்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், உணர்ச்சிகளும் நகைச்சுவையும் சரியான அளவில் கலந்துள்ள ஒரு குடும்ப நாடகம் என பாராட்டியுள்ளார். மேலும், அறிமுக நடிகர்கள் சிறப்பாக நடித்துள்ளதாகவும் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்திப் பதிவிட்டுள்ளார்.