ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தாழனூர் சத்திரம் நான்கு வழிச் சாலை சந்திப்பில், கார் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இடதுபுற சாலையில் இருந்து வந்த காரின் பக்கவாட்டில் இருசக்கர வாகனம் மோதிய காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன. விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற தாய், மகன் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.