தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே பசிக்காக தொடர்ந்து அழுத 2 மாத ஆண் குழந்தையை பெற்ற தாயே அடுப்பில் வைத்து எரித்து கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. கட்டுமான பணிக்காக மத்திய பிரதேசத்திலிருந்து வந்த மம்தா என்ற அந்த பெண், குழந்தையின் அழுகையை நிறுத்த வாயில் துணியை திணித்து இந்த செயலில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர். சக தொழிலாளர்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், மம்தாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.